ஹோமியோபதி. இந்த இதழ் 129 ஆவது இதழ், ஆசிரியர் - அ.ந. வணங்காமுடி, மனிதனது நோய் தீர்க்க வந்த அரிய மருத்துவ முறை ஹோமியோபதி முறையே ஆகும். நல்லனவற்றை நாடுகிற நுண்மான நுழைபுலம் மனிதர்களுக்குக் கல்வி வழியாகக் கற்பிக்கப் படாததால், அவர்களது ஆங்கில மோகம் போலவே, மருத்துவம் என்றால் கொட்டிக் கொடுத்து - மருந்து மாத்திரைகளை அடுக்கி வைத்து - சாப்பிடுவதும் - மருத்துவ மனையில் படுத்துத் தன் பெருமையை நிலைநாட்டுவதும் - கேலிக் கூத்து போலவே அரங்கேறி வருகிறது. இலட்சம் இலட்சமாய் கொட்டிப் படித்த மேதாவிகளும், அரங்கமைதது, அழகிய அறை அமைத்து - பணம் பிடுங்குவதை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நிலையை மாற்றி - மனிதனை குணப்படுத்தும் அரிய முறை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊக்குவதற்கென்றே - இந்த இதழ் தொடர்ந்து வருகிறது. இதழாசிரியர் எழுதுவதோடு நில்லாமல் - மருத்துவமனை வைத்து - மருத்துவப் பணியையும் நிறைவாகச் செய்து வருகிறார். இலவச முகாம்களையும் நடத்தி வருகிறார்.
மதுரையிலிருந்து வணங்காமுடி அவர்களால் தொடர்ந்து ஹோமியோபதி மருத்துவ முறையை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக வெளியிடப்பட்டு வருகிற திங்களிதழ். ஒரு இலக்கியவாதி மருத்துவராக இருப்பதனால் அவரது அனுபவங்களை, இந்த மருத்துவ முறையை எப்படி அறிமுகப்படுத்துவது என்பதை, சுவையாக ஏற்புடையதாக - இலக்கியப் பாங்குடன் - படைப்பாக்கங்களாக எழுதி வருகிறார். எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாமல் இலவச மருத்துவ முகாம்களையும் நிறுவி பலருக்கும் இலவசமாக மருத்துவமும் செய்து வருகிறார். நண்பர்களின் பிற்நத நாளை குறித்து வைத்துக் கொண்டு அவர்களுக்குப் பிறந்தநாள் சொல்வது அதிர்வூட்டக் கூடியதாக இருக்கிறது.
அ.ந. வணங்காமுடி அவர்கள் மதுரையிலிருந்து மக்கள் நலம் கருதி வெளியிடுகிற ஹோமியோ கருத்துகளை
உடைய இதழ் இது. 101 ஆவது இதழ் இது. இலக்கியத்தையும், மருத்துவததையும் இரு கண்களாக எண்ணிச்
செயற்படுகிற ஆசிரியரின் இதழ் இது. குறுக்கெழுத்துப் புதிர், சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் என்கிற
போட்டிகளின் வழி, படிப்பவர்களை ஹோமியோ கருத்துகளை உள்ளவாங்க வைக்கும் நுட்பம் அருமையாக உள்ளது. .
அ.ந.வணங்காமுடி அவர்களின் ஹோமியோபதி இதழ் 100 இதழ்களை நிறைவு செய்துள்ளது. இது ஹோமியோ
மருத்துவ நிலையிலும், இதழியல் துறையிலும் கிடைத்தற்கரியது. மருத்துவராக இருந்து மக்களை நோய்
நீக்குவதோடு, இதழாளராக இருந்து கருத்து விதைப்பது வணங்குதற்குறியது. 100 ஆவது இதழின் இலவச
இணைப்பிதழாக இந்தத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. பொறியாளர் பாலசுப்பிரமணியன் "தங்கம்" தொடர்பாகத்
திரட்டிய பல்வேறு செய்திகளைத் தொகுத்து இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கம் தொடர்பாக இத்தனை
செய்திகளா என வியப்புறும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. அறிவியல் நிலையிலும், ஆய்வாளர் நிலையிலும்,
மக்கள் நிலையிலும் தங்கத்தின் பல்வேறு பரிமாணங்களை கட்டுரைகளாக்கியுள்ளதைக் காணமுடிகிறது.
ஹோமியோபதி : வழக்கமாக மனிதனை நலமாக்கும் ஹோமியோ செய்திகளைத் தரமாக ஒவ்வொரு திங்களும் வெளியிட்டுவரும் வணங்காமுடி - பொறியாளர் டி.பாலசுப்பிரமணியன் உதவியுடன், ஆழிப் பேரலை பற்றிய அனைத்துச் செய்திகளையும் திரட்டித் தனி நூலாக பிப்ரவரி இதழுடன் இணைப்பிதழாக வெளியிட்டுள்ளார்.
ஹேமியோபதி: அ.ந. வணங்காமுடி மருத்துவர், எழுத்தாளரை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிற தரமான ஹோமியோபதி இதழ். 8 ஆண்டுகளாக வெளிவருகிறது. இதுவரை 87 இதழ்கள் வெளிவந்துள்ளது. நூல் விற்பனை, மருத்துவ முகாம் என மக்கள் நலச் செயற்பாட்டிற்காக வெளிவருகிற இதழ். தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |