விழிப்புணர்வு. மதுரையிலிருந்து அரசு சட்டக்கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் இதழ் இது. இருமாத இதழ். இதழ் எண்:7. இந்த இதழில் வரலாற்றுச் சுவடுகள் என வெண்மனி நிகழ்வினை மறுபதிவுசெய்துள்ளது. வர்மக்கலை என்பது தமிழரது மருத்துவமே என்கிற கட்டுரை நுட்பமாக உள்ளது. இடர் மேலாண்மை எங்கிருந்து தொடங்குகிறது என்ற கட்டுரை சுற்றுச்சூழல் பற்றிய புரிந்துணைவை ஊக்குகிறது. வீரப்பன் தேடுதல் வேட்டை அவலத்திற்குத் தீர்வு என்ன என்கிற பாலமுருகனின் கட்டுரை சிந்திக்கத் தூண்டுவதே.அமெரிக்க சொர்க்கத்தின் ஆசிய அடிமைகள் கட்டுரை நாடுகடந்து சென்று கூனிக்குறுகி வாழும் அவல வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,