வடக்கிலுள்ள டெல்லியிலிருந்து வெளிவருகிற தமிழ்த் திங்களிதழ். ஆசிரியர் கி.பென்னேஸ்வரன். யமுனைக் கரையில் பொங்கிய தமிழ்ப் பண்ணிசை, தாண்டவக்கோன் எழுதிய மலிந்தவர்கள், சுஜாதாவுக்கான அஞ்சலி, கல்லாங்குத்து சிறுகதை, வரி விதிப்பும் அர்த்த சாத்திரமும், நூல் வாசல், ஆலய வாசல், நூல் மதிப்புரை, நடந்தவை, சனிமூலை - என 54 பக்கங்களில் தனது இதழை வெளியிட்டுள்ளது. இடை இடையே பல்வேறு துணுக்குச் செய்திகளை இதழைச் சுவையுடன் நகர்த்துகிறது.



இந்த இதழில் பொள்ளாச்சி மகாலிங்கம் நேர்காணல் இடம் பெற்றுள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் சிறப்பாக இருக்கிறார்கள் என்று கூறும் இவர் அவர்களுக்காக வளர்த்தெடுக்கும் திட்டங்கள் என்ன வைத்துள்ளார் என்பதை நேரில்தான் கேட்டறிய வேண்டும். 'அமு' திரைப்படம் பற்றிய குறிப்பு அருமை. இந்திரா காந்தி இறந்த அன்று நான் டெல்லியில்தான் இருந்தேன். நடந்த நிகழ்வுகளை நேரில் அனுபவித்துள்ளேன். தில்லிக்கு வந்த அந்தத் தொடர்வண்டியை மேலிருந்து பார்த்து ஒடுங்கிப் போனேன்.



இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு என்கிற அறிவிப்புடன் வடக்குவாசல் புது தில்லியிலிருந்து வெளிவருகிறது. இது 6 ஆவது இதழ். இந்த இதழில் "அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றாகி விட்டது. இனி முழுக்க முழுக்க வாசலும், நாடகமும் தான்" என்ற அறிவிப்புடன் ஆசிரியர் உரை காணப்படுகிறது. முதல் நிகழ்வாக இசைவிழா இதழ் பொறுப்பில் நடைபெறவுள்ளது. அரசுப்பொறுப்பில் ஒட்டிக்கொண்டு காலம் கடத்தி, வெளியேவரும் பொழுது முறுக்கின்றித் தொய்ந்து ஏதோ செய்யாமல் வீறுடன் செயலாற்றத் திட்டமிட்டவர் வெற்றி பெற வாழ்த்துகள். இதழில் 4 சிறுகதைகள், 3 கவிதைகள், 4 கட்டுரைகள் உள்ளன. வழக்கறிஞர் ஆர்.மேகனின் நேர்காணலும் உள்ளது. இதழில் வந்த சிற்றிதழ்களின் முகவரிகளும் காணப்படுகின்றன.



புது டெல்லியிலிருந்து யதார்த்தா பென்னேஸ்வரன் வழிகாட்டுதலில் வெளிவரும் திங்களிதழ். முதல் இதழில் கோமல் சுவாமிநாதன் அவர்களை அட்டைப்படத்தில் நினைவுகூர்ந்துள்ளது. இது இரண்டாவது இதழ். அக் 2005. பழைய சுபமங்களா வடிவில் சுபமங்களா போலவே, எஸ்.ராமாமிருதம் அவர்களது நேர்காணலுடன், உரைவீச்சுகள், கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. சொக்கன் அவர்களது சேருமிடம் கதை சுவையாகவே உள்ளது. தரமான பட விமர்சனமும் செய்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,