வெளியீட்டு எண் 23, இதழ் நன்கொடை ரூ10, வணிக விளம்பரங்கள் ஏதுமின்றி, தேவையைப் பொறுத்து அவ்வப்போது வெளிவந்து விழிப்புணர்வு ஆக்குகிற தரமான இதழ். இதழ் நிர்வாகி - இராசேந்திர சோழன், நிர்வாகக்குழு - காஞ்சி அமுதன், சக்தி சுப்பு, பொன் மாயவன், மா.மு. பூங்குன்றன், இதழுக்கான ஓவியம் ஓவியர் வீர.சந்தானம், இதழ் காந்தி நகர், மயிலம், 604 304, திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வெளிவருகிறது - அலைபேசி - 94432 12761.
முதலாமாண்டை நிறைவு செய்து இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் மண்மொழி இதழின் 11 ஆவது வெளியீடு இது. இதழில் அசாமில் அப்பாவிகள் படுகொலை, பண்டைத் தமிழிசை, நினைவுக் கற்கள் (அ) நடுகற்கள், சங்க இலக்கியங்களும் -வஜ்ஜாலக்கமும், விமான நிலைய விரிவாக்கமும் நவீனமயமாக்கலும், மொழித்துறை ஒரு மதிப்பீடு, தமிழகத்தின் மூவேழு வள்ளல்கள், பன்னாட்டுத் திரைப்படவிழா, பகுத்தறிவுப் பேச்சில் மட்டுமல்ல, மாணவர் பக்கம், சாமானியர்களுக்குத் தமிழ்த் தேசியம், மார்க்சியம், தேசியம், மார்க்சிஸ்டுகள் என்கிற கட்டுரைகள் இதழில் காணப்படுகின்றன. நிர்வாகி இராசேந்திர சோழன், அச்சாக்கம் சென்னை தேவா அச்சகம், வெளியிடு மண்மொழி வெளியீட்டகம், காந்தி நகர், மயிலம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
இது 7 ஆவது இதழ். சேலத்தில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரமைப்பின் நான்காமாண்டு நிறைவு விழாவையொட்டி இந்த இதழை வெளியிட்டுள்ளது. இது பதிவு பெற்று முறையாக அஞ்சல் சலுகையுடன் பருவகால இதழாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது வரை தேவை கருதி கருத்துச் செறிவோடு பயணிக்கும் என அறிவித்துள்ளது. இதழின் பக்கங்கள் தமிழின உணர்வோடு வெளிவருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கிளர்ந்து எழுந்து கட்டுரையை வெளியிட்டு வருகிறது. தமிழ் மொழி சார்ந்து சில முதல் நிகழ்வுகள் என மா.பூங்குன்றன் தொகுத்துள்ளது சிறப்பாக உள்ளது. தமிழ் மன்றங்களின் செயற்பாடு பற்றி விளக்கியுள்ளது. உலகளாவிய பிரச்சனைகளை அலசுகிற இதழாகவும் இது தொடர்கிறது.
இது முதலாமாண்டின் ஐந்தாவது இதழ் இது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் சரி அர்ச்சனை எந்த மொழியில், தினம் வரும் மே தினம், இட ஒதுக்கீடு, காவிரி நீர் உரிமை, டாவின்சி கோட் உண்மை அறியும் உரிமையை மறுக்கும் மதப் பழமைவாதங்கள், நெடுங்செழியனின் ஓவியத்தூண்டல், மதில்களுக்குள் முடங்கிடுமோ மனத்திடம், தொல்லியல் ஆய்வுகள், வழக்காடும் உரிமை, சமயசார்பற்ற குடியரசு, வாழ்வுரிமை பறிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் - என்கிற கட்டுரைகள் இதழில் இடம் பெற்றுள்ளன. இதழில் வடிவமைப்பிற்காக நண்பர்கள் சேர்ந்து கணினி வாங்கி, தட்டச்சு செய்து இதழை வெளியிடுவது என்பது உயரிய முயற்சி. நம்காலில் நாம் நின்று செயல்பட இயலும். வாழ்த்துகள்.
காந்திநகர், மயிலம் 606 304, திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து இராசேந்திர சோழன் ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ள முதல் இதழ் இது. மண், மொழி என்கிற தலைப்பில் இதழ் மலர்ந்துள்ளது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |