சென்னையிலிருந்து தரமராசன் அவர்கள் வெளியிடுகிற திங்களிதழ் இது. இந்த இதழின் அட்டையில் க.மு.வல்லத்தரசு அவர்களது புகைப்படத்தை வெளியிட்டு - உள்ளே கட்டுரை எழுதியுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் தரமான இலக்கியவாதிகளின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. சிறப்பான இதழ்களும் இருந்தன, இந்த இதழ் புதுக்கோட்டை மாவட்டம் பற்றிய நிறைய செய்திகளை இது வரை வெளியிட்டுள்ளது. கதை, கவிதை, கட்டுரை - என அனைத்துப் படைப்பாக்கங்களையும் இதழில் வெளியிட்டு வருகிறது. தரமான அச்சமைப்பில் பல்வேறு நண்பர்களையும் எழுத வைத்துள்ளது.
இந்த இதழ் மூன்றாமாண்டின் 6 ஆவது இதழ். தன்பாட்டுத்திறத்தால் மக்களை விழிப்புணர்வூட்டிய கவிஞர் தாராபாரதியின்
சிறப்பிதழாக இந்த இதழ் மலர்ந்துள்ளது. வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்கிற
பாடல் பலரது நெஞ்சிலும் நின்று வளர்த்தெடுப்பவை. கவிஞர் தாராபாரதி அறக்கட்டளை பற்றியும், அவர்
நினைவிலான நூலகம் பற்றியும் இதழ் குறிப்பிட்டுள்ளது. கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பையும் இதழ்
வெளியிட்டுள்ளது. இதழின் தரமான இலக்கியக் கட்டுரைகளும், கவிதைகளும், துணுக்குகளும் இடம் பெற்றுள்ளன.
புதுகைத் தென்றல்: கட்டுரைகள், உரைவீச்சு, மரபுப்பாக்கள், வரலாறு, நூல் மதிப்புரை எனப் பல்சுவையாகத் தரமாக வெளியிடப்படும் இதழ் இது. பதிவு பெற்ற இதழ். இது இதழ் எண் 2, புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தைப் பற்றிய தொடர் பயனாகுவது, வழிகாட்டுவது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |