நூறு பூக்கள் மலரட்டும். சென்னையிலிருந்து தமிழக அரசியல் ஆய்வு நடுவம் வெளியிட்டுள்ள இதழ் 1 காலாண்டிதழ் இது. உலகமயமாக்கலும் தமிழகமும் என்னும் பொதுத் தலைப்பை ஒட்டிய கட்டுரைகளைத் திரட்டி இந்த இதழில் வெளியிட்டுள்ளது. தமிழக மனித உரிமைக் கழகத் தோழர் அரங்க. குணசேகரன், தமிழ் உரிமைக் கழகத் தோழர் ருத்திரன், தமிழ் தமிழர் இயக்கத் தோழர் குறிஞ்சிக் கபிலன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க தமிழ்த் தேசிய மார்க்சியக் கட்சியின் தோழன் இராசேந்திர சோழன், வத்ராயிறுப்புத் தோழர் தெ.சுந்தரமகாலிங்கம், மும்பை தோழர் புதிய மாதவி, சென்னைத் தோழர் பா. செயப்பிரகாசம், தமிழியம் பரணிப் பாவலன், தமிழ் அரண் பாவாணர் மன்றம் பெறிஞர் அகன் - ஆகியோரது படைப்பாக்கங்களைத் திரட்டி இதழாக்கியுள்ளனர். நூறு பூக்கள் மலரட்டும் என்ற இதழ் தொடர வாழ்த்துகள். தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |