நாளைவிடியும் இதழாளர் திரு பி.இரெ.அரசெழிலன் அவர்களது இல்லத் திறப்பு விழா அழைப்பிதழும் நாளை விடியல் இதழும் இணைந்துள்ளது. அழைப்பிதழையே - அறிவிப்பு இதழாக மாற்றியுள்ளார் ஆசிரியர். இல்லத்திறப்பு விழா பகல் 12.05 எமகண்டத்தில் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் பேரா. ந.வெற்றியழகன் தொகுத்துள்ள வாஸ்து அறிவியலா ? என்ற அறிவு விளக்க நூலாகவும் இந்த இதழ் மலர்ந்துள்ளது. வாஸ்து என்பதற்கான வரலாற்றுப் பார்வை எனப்படுகிற அறிவுக்கு ஒவ்வாது புளுகு மூட்டைகளைச் சுட்டிக்காட்டி விளக்குகிற கையேடாகவும் இந்த இதழ் விளங்குகிறது. தொடர்புக்கு: அறிவுச்சுடர் வெளியீட்டகம். 7ஆ திருஎறும்பீசுவரர் நகர், (காவேரி சிற்றங்காடி எதிரில்) மலைக்கோயில், திருவெறும்பூர், திருச்சி 620 013 - பேச 94433 80139
10 ஆம் ஆண்டில் வெளிவந்து கொண்டிருப்பது இந்த இதழ். இதழ் வரிசை எண் 55. தோழர் பகத்சிங்கின் நூற்றாண்டு நினைவாக இந்த இருதிங்கள் இதழானது வெளியாகியுள்ளது. திருச்சியிலிருந்து வெளிவரும் இந்த இதழ் தமிழ் வளர்ச்சியையும், பகுத்தறிவையும் தன் இரு கண்ணாக எண்ணி வெளிவந்து கொண்டிருக்கிறது இந்த இதழ். வணிக நோக்கமின்றி வெளிவருகிற தரமான கருத்துச் செறிவுள்ள இதழ். திராவிடர் - என்ற சொல்லாடல் ஓர் ஏமாற்று வித்தை என்கிற பொறி அகன் அவர்களது கருத்துத் தொகுப்பு இந்த இதழில் காணப்படுகிறது. திராவிடத்தைத் தமிழகத்திற்குள் எந்த வகையிலும் ஏற்க இயலாது என்கிற அரிமாவளவனின் குறிப்பும் உயர் தரத்ததே, சிந்திக்கத் தூண்டுவதே. இதழுக்கு வந்த சிற்றிதழ்களின் பட்டியலும் இதழில் காணப்படுகிறது. தமிழ் உணர்வோடும், பகுத்தறிவோடும் நிகழுகிற செயற்பாடுகளை நிகழ்வுக் குறிப்புகளாக இதழில் வெளியிட்டு வருகிறது. உங்களிடமிருந்து என மடல்களையும் வெளியிட்டுள்ளது. - நாளைவிடியும், 4/7முருகன் இல்லம், பாரதிபுரம் முதல் தெரு, கைலாசபுரம் அஞ்சல், திருச்சி 14
தேடுங்கள் தெளிவு பெறுங்கள் எனத் தலைப்பிலிட்டு, நிறைய செய்திகளைத் தொகுத்துத் தருகிற இருதிங்களிதழ் இது. சூன் 14 சேகுவேரா பிறந்தநாள் சிறப்பிதழாக இந்த இதழ் மலர்ந்துள்ளது. திராவிடர் மாயைதானா என்ற கட்டுரை இந்திய தேசியத்தில் திராவிடநிலை பற்றியும், பார்ப்பனீயம் பற்றியும், தமிழர்களது நிலை பற்றியும், எப்படி விடுதலை அடைவது என்பது பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார். வாலாசா வல்லவனின் நூல் பற்றிய வீச்சான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இதழ் அறிமுகம், துணுக்குச் செய்திகள், நிகழ்வுகள், உரைவீச்சுகள் என நிறைய செய்திகளை இதழில் அடக்கியுள்ளது. வணிக நோக்கமின்றி கருத்து விதைப்பிற்காக தொடர்ந்து வருகிற இதழ் இது.
பகுத்தறிவு, விழிப்புணர்வுத் திங்களிதழ் - நாளை விடியும். பி. இரெ. அரசெழிலன் தொடர்ந்து நடத்தி வருகிற இருமாத இதழ். பகுத்தறிவுக் கருத்துகளைச் சரியாகச் சான்றுகளுடன் விளக்கி, அதுகுறித்துப் பேசுகிற படைப்பாளர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிற இதழ். இதழ் மட்டுமல்லாது துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஒட்டிகள் வழியாகவும் கருத்துப்பரவல் செய்கிற இதழ். தமிழ்ப் பற்றோடு தமிழுணர்வுச் செய்திகளையும் வெளியிட்டு வருவது. நடைமுறையிலள்ள கருத்தை முன்வைத்து இதழின் படிப்பாளர்களை எழுதவைத்து, வரிசைப்படுத்துவது. விளம்பரமே இல்லாது அதிக பக்கங்களில் கருத்துச் செறிவேற்றுகிற இதழ். 4/ 7 முருகன் இல்லம், பாரதிபுரம் முதல் தெரு, கைலாசபுரம், திருச்சி 14.
மொழி உணர்வும் பகுத்தறிவுச் சிந்தனையும் உடைய தரமான இருமாத இதழ். தொடர்ந்து தொய்வின்றி இதழ் வந்து கொண்டிருக்கிறது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |