இனிய நந்தவனம். ஒவ்வொரு இதழிலும் சிறப்பாக இயங்குகிற ஒருவரை நேர்காணல் கண்டு அவரது படத்துடன் அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் இந்த இதழில் தமிழ்த் திரு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அய்யா அவர்களின் நேர்காணலை வெளியிட்டுள்ளது. இதழில் உரைவீச்சுகள், துணுக்குச் செய்திகள், கட்டுரைகள், குறிப்புகள் - எனப் பன்முகத்தோடு தொடருவது இதன் சிறப்பு. உலகத் தமிழர்களிடையே நட்புறவை, ஏற்படுத்திக் கொண்டு அவர்களை இதழில் இணைப்பதை, இந்த இதழில் காணமுடிகிறது.
இதழ் தனது 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியுள்ளது. விழாவின் நிழற்படக் காட்சிகள் இந்த இதழில் உள்ளன. இந்த இதழில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுடைய நேர்காணல் உள்ளது. வந்தவனம் என வாசகர் கடிதங்களை வெளியிட்டு வருகிறது. வளவ துரையனின் கொடிமரம் சிறுகதை இதழில் உள்ளது. வெளிநாட்டுப் படைப்பாளிகளையும். தமிழ்நாட்டுப் படைப்பாளிகளையும் இணைத்துக் கொண்டு இந்த நந்தவனம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதழ் அட்டையின் உள், வெளி விளம்பரங்கள் இதழின் அட்டையை பல வண்ணத்தில் அச்சடிக்க உதவுகிறது. இதழ் தொடர வாழ்த்துகள்.
திருச்சியிலுள்ள முதல் பெண் ஓதுவாரான திரு அங்கயற்கண்ணி அவர்களை நேர்காணல் கண்டு இதழில் வெளியிட்டுள்ளது. மேழிக்குமரன் தொகுத்து அனுப்பியுள்ள ஜெர்மனியில் தடம் பதித்த தமிழர்கள் நூல் வெளியீட்டு விழா பற்றிய குறிப்பு இதழில் உள்ளது. பரதநாட்டியம் பயின்ற சிரீதரன் பற்றிய குறிப்பும் இதழில் உள்ளது. துணுக்கு, உரைவீச்சு, சிறுகதை எனப் பல்சுவையோடு இதழ் தொடர்ந்து வெளிவருகிறது.
உலகத் தமிழர்களிடையே வலம் வரும் மக்கள் மேம்பாட்டு இதழ் எனத் தன்னை அறிவித்துக் கொண்டு திருச்சியிலிருந்து
தொடர்ந்து வருகிறது இந்த இதழ். இந்த இதழ் மூன்றாமாண்டின் ஐந்தாவது இதழ். இதழில் கட்டுரை, நேர்காணல்,
கவிதை என வெளியிட்டு வருகிறது. கடல் கடந்த செய்திகள் இதழில் நிறைய உள்ளன. வெளிநாட்டுத்
தமிழர்களோடு தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய செய்திகளை, அங்குள்ள நிகழ்வுகளை வெளியிட்டு
வருகிறது. இந்த இதழில் இலங்கை இதழாளர் அந்தனி ஜீவா அவர்களது நேர்காணலை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. பிரான்சிலிருந்து வண்ணை
தெய்வம் தொடர் எழுதுகிறார். இறுதிப் பக்கம் லேணா பக்கமாக மலர்ந்து வருகிறது.
திருச்சியிலிருந்து வெளிவருகிற திங்களிதழ். மே 2005 இதழில் எனக்குத் தெரிந்தது எல்லாம் பத்திரிகைத் துறைதான் - என்கிற இலண்டன் பத்திரிகையாளர் ஈ.கே.இராஜகோபால் அவர்களது நேர்காணலை வெளியிட்டுள்ளது. இதழில் வெளியாகியுள்ள வீ.ந.சோ. அவர்களது மூன்றாவது மொழிப்போர் மூளுமா ? என்ற கட்டுரையும் உயர்தரத்தது. துளிப்பா, உரைவீச்சு, கட்டுரைகள், துணுக்குகள் என விழிப்புணர்வுச் செய்திகளை வெளியிடுகிற திங்களிதழ். முகவரி : 6 வெள்ளாளத் தெரு, உறையூர், திருச்சி 620 003 தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |