அரிமாவளவன் சிறப்பாசிரியராக இருந்து கூடலூர் வேலாயுதபுரத்திலிருந்து வெளியிடுகிற இதழ். மழை வெள்ளம், புயல், சுனாமி எனத் தமிழ்நாட்டுப் படிப்பினைகள் பற்றி முதல் கட்டுரை எழுதியுள்ளது. ஊடக பயங்கரவாதிகள் என ஊடகத்தின்வழி கருத்துச் சீரழிப்பு செய்வதைச் சுட்டிக்காட்டுகிறது. பாமயன் எழுதும் தமிழக வேளாண்மை தொடர் சிறப்பானதே.இரவிக்குமாரின் வரலாற்றை நேர் செய்தல், எரோனிமுசுவின் இலக்கு இலந்த கல்வி - தொடர்கள் அவலங்களைச் சுட்டிக்காட்டுகிற கட்டுரைத் தொடர்களே.



அரிமாவளவன் வெளியிடுவது. தெளிதமிழுக்காக இயங்குவது. ஆரிய மாயையைத் தோலுரித்துக் காட்டுவது. வடவர்களின் சூழ்ச்சியை, தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி விழிப்புணர்வேற்றுவது.



வேர்கள் : சிறப்பாசிரியர் : அரிமாவளவன். தமிழ்த் தேசியத்தை, பகுத்தறிவை, விழிப்புணர்வை, முன்னெடுத்துள்ள சிறப்பான கருத்து விளக்கத் திங்களிதழ். பாதுகாக்க வேண்டிய அருமையான இதழ். தனியிதழ் ரூ5, ஆண்டு நன்கொடை ரூ60, முகவரி : மை.பா, வேலாயுதபுரம், கூடலூர் அஞ், நெல்லை மா.



நம் வேர்கள் : அரிமாவளவன் அவர்களது பதிவுபெற்ற கருத்துச் செறிவுத் திங்களிதழ். பெரியார், அம்பேத்கர் கருத்துகளை உள்வாங்கி, நடைமுறையோடு பொருத்தி நோக்கி, செறிவான கருத்து விதைப்புப படைப்பாக்கங்களை வெளியிடுகிற இதழ். இது முதல் இதழ். முகவரி : மை.பா., வேலாயுதபுரம், கூடலூர் அஞ், நெல்லை மாவட்டம். மின்அஞசல் vaergall@hotmail.com



அரிமாவளவன் சிறப்பாசிரியராக இருந்து வெளியிடுகிற இதழ். நதிகள் இணைப்பு என்ற ஓர் நாடகம், யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள இனவெறியும், எரிகிற வீட்டில் பிடுங்கத் திரியும் பிற தேசியர், உப்புக்கல்லை வைரமென்று சொன்னால், இலக்கு இழந்த கல்வி, நீங்கள் என்ன கரூரிலா வசிக்கிறீர்கள் என்பன போன்ற தரமான கருத்துச் செறிவுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,