தெளிதமிழுக்காகத் தொடர்ந்து இயங்கி வருகிற இதழ். அயற்சொற்களற்று தெளிதமிழில் இதழ் முழுமையும் தமிழிய உணர்வோடு, பாக்களையும், கட்டுரைகளையும், துணுக்குகளையும் வெளியிட்டு வருகிற இதழ். சிறுவர்களுக்கா இதழ் நடத்தியும், தமிழ்ப்பள்ளியை தமிழக வரலாற்றில் முதன் முதலாகத் தொடங்கியும் வெற்றி கண்ட இதழ். தமிழுக்காக, மக்களுக்காக வீட்டிலுள்ள அனைவரும் இயங்குவது வணங்குதற்குரியது.



தென்மொழி : மூன்றாம் மொழிப்போர் மாநாடு பற்றிய அறிவிப்பை முன் அட்டையில் வெளியிட்டுள்ளது, 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிற தெளிதமிழுக்காக இயங்குகிற இலக்கியத் திங்களிதழ். மாணவர்களுக்காக தமிழ்ச் சிட்டு இதழையும் வெளியிட்டு வருகிறது. பெருஞ்சித்திரனார் தொடங்கிய இந்த இதழைத் தற்பொழுது தாமரை பெருஞ்சித்திரனார் அவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். கப்பல்வழி ஆண்டுக் கட்டணம் ரூ200. வானூர்தி வழி ரூ 300.



தென்மொழி : ஆசிரியர் : தாமரை பெருஞ்சித்திரனார். கடந்த 37 ஆண்டுகளாகத் தமிழினமீட்சிக்காகவும், தமிழ் மொழிகாப்பிற்காகவும் தொடர்ந்து இயங்குகிற திங்களிதழ். தரமான கட்டுரைகள், மரபுப்பாக்கள், குறிப்புகள் எனத் தொடர்ந்து வருகிற இதழ். முகவரி : ஆசிரியர், தென்மொழி, மேடவாக்கம், சென்னை 601302


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,