தமிழறம். இளமாற அடிகளால் யாதும் ஊரே, யாவரும் தமிழர் எனத் தலைப்பிலிட்டு திங்களிதழாகக் கடந்த 4 ஆண்டுகளாக சூசையப்பர் கிராமம், கெ.கல்லுப்பட்டியிலுருந்து வெளிவருகிற இதழ் இது. பாவாணர் பற்றிய செய்திகளையும், சாத்தூர் சேகரன் அவர்களது தமிழ் ஆராய்வுக் கட்டுரைகளையும், முனைவர் மு.குருவம்மாள் அவர்களது இமயம் முதல் குமரி வரை தமிழ் என்ற கட்டுரையும் உடைய தமிழ் உணர்வுத் திங்களிதழ். வணிக நோக்கமற்று இதழின் ஒவ்வொரு பக்கங்களையும் தமிழ் உணர்வோடு படைத்தளிக்கிற இதழ். சாத்தூர் சேகரனார் அவர்களது இருக்கு நூல் உலகின் முதல் நூல் அன்று என்ற கட்டுரை பன்மொழிப் புலமையை உள்ளடக்கிய ஆய்வாளரின் சிறப்பான படைப்பாகவே இருக்கிறது. உலக மொழிகள் அனைத்திலும் தமிழின் வேர் இருக்கிறது என்ற சுட்டல் தமிழர் ஒவ்வொருவரும் தலை நிமிர்தலுக்குரிய செய்தி ஆகும். தமிழ் விடுதலையே தமிழனின் விடுதலை உயரிக கருத்துதான். பாவலரேறு, பெரியார் கருத்துகளையும் வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.



தமிழறம். தேனீ மாவட்டம், கெ.கல்லுப்பட்டியிலிருந்து இளமாற அடிகள் வெளியிடுகிற இதழ். இது நான்காவது ஆண்டில் தொடருகிற இரண்டாவது இதழ். யாதும் ஊரே யாவரும் தமிழர் என்ற தொடர்களை தலைப்பில் குறிப்பிட்டு தமிழ், தமிழியம் தொடர்பான செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. தெளிதமிழில் வெளிவருவமிதழ். இந்த இதழில் சாத்தூர் சேகரனார் சமற்கிருதம் பற்றிய சில உண்மைகளைக் குறிப்பிட்டுள்ளார். இரா.மதிவாணரின் வட இந்திய மொழிகளுக்கு தமிழே தாய்மொழி என்ற கட்டுரையும் பயனாகுவதே. சாத்தூர் சேகரன் அவர்களது நூல்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதழ் தொடர வாழ்த்துகள்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,