தமிழ்த் தேசியச் சமூகநீதித் திங்களேடு எனத் தலைப்பிலிட்டு சென்னையிலிருந்து சிவ.காளிதாசன் வெளியீட்டாளராகவும், தியாகு ஆசிரியராகவும் இருந்து வெளியிடுகிற இதழ். இது எட்டாவது இதழ். இரத்தன் டாடாவுக்கு இரத்தினக் கம்பளமா? இன ஒடுக்குமுறையைக் காக்கவே ஈழ எதிர்ப்பு, சேலம் தொடர்வண்டிக் கோட்டம் பற்றி திமுக மறியலும் தீக்கதிர் உளறலும், இந்திய எல்லைக்குள் அயல் நாடுகளைத் தோற்றுவிக்கும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், என்கிற கட்டுரைகள் மிகச் சரியான பார்வையில் தெளிவான வழிகாட்டுதலோடு பதிவாகியுள்ளன. மரத்தடி மாநாடு தொடர் எளியவரையும் ஈர்க்கும் தன்மையதே. உலகின் வருங்காலம் (களங்கள் வேறு, கதைகள் ஒன்றே) என்ற தொடர் வரலாறு காட்டுவதே. பள்ளிக்கூடம் திரைப்படம் பற்றிய விமர்சனம் இந்த இதழில் உள்ளது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |