தமிழ்ப்பாவை. அருளாளன் என்கிற கருணைதாசன் அவர்களது தமிழுணர்வுத் தொடர்பு இதழ். இது 229 ஆவது இதழ். என் பயணப்பாதை என ஆசிரியர் பயணித்த தமிழுணர்வு நிகழ்வுகளை இதழில் தொடராக வெளியிட்டு வருகிறது. இதனைப் படிக்கும் பொழுது நெஞ்சு நிமிரும். நம்மையும் இயங்க ஊக்குவிக்கும். இதழில் நிறைய துணுக்குகள் நுட்பமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழுணர்வு கெடுகிற போதெல்லாம், "அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க" என்கிற வரிகளுக்கிணங்க பல்வேறு நிலைகளில் தமிழுணர்வு விதைப்பைத் துணுக்குகளின் வழி இதழ் நுட்பமாகச் செய்து வருகிறது. தெளிதமிழில் பிழையற்று எழுதினால் மட்டுமே இதழில் வெளியிடுவேன் என உறுதியோடு வெளியிட்டு, அதனை இதழில் நிகழ்த்தியும் காட்டுகிற இதழ் வாழ்த்தப்பட வேண்டியதே.



தமிழ்ப் பாவை மதுரையிலிருந்து கருணைதாசன் வெளியிடுகிற இதழ். தமிழ், தமிழர், தமிழ்நாடு என இயங்குவது. இதழுக்கு ஒற்றுப்பிழை இல்லாது எழுதவேண்டும் என்று வலியுறுத்துவதோடு, அயற்சொற்களில் எழுதியவை வெளியிட மாட்டோம் என அறிவித்து, அனைத்து இதழாளர்களையும் தமிழில் எழுத வேண்டுகோள் விடுத்து - இப்படித் தரமாகத் தொடர்ந்து இயங்கி வருகிற திங்களிதழ்.



தமிழ்ப் பாவை: அருளாளன் அவர்களது தொடர் பணியாக, தமிழரது விழிப்புணர்விற்காக வெளிவருகிற திங்களிதழ். மரபுப்பா, சிறுகதை, கட்டுரை, குறிப்பு, தமிழுணர்வுச் செய்திகள் எனத் தரமாக வெளியிடுகிற இதழ். இது 217 ஆவது இதழ்.



தமிழ்ப்பாவை : மதுரையிலிருந்து அருளாளன் அவர்களால் தமிழ் மொழியின் பன்முக ஆற்றலை விளக்குவதற்காகத் தொடர்ந்து தமிழ் உணர்வோடு வெளியிட்டுக் கொண்டிருக்கிற இதழ். இது 210 ஆவது இதழ். கட்டுரைகள், மரபுப்பாக்கள், உரைவீச்சுகள், குறிப்புரைகள், வினா விடை - எனச் சுவையாக மக்களை ஈர்க்கும்படியாக வெளியிடுவது இதழ் சிறப்பு


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,