சுற்றுச்சூழல் புதிய கல்வி. சுற்றுச் சூழல் தொடர்பாக வெளிவருகிற தரமாக திங்களிதழ். இந்த இதழில் ஆதிவாசிகள் உலகம், பூச்சிக் கொல்லிகள், மான்டோசா பற்றிய தரமான கட்டுரைகளும், விழிப்புணர்வுக் கவிதைகளும் உள்ளன



சுற்றுச் சூழல் புதிய கல்வி. மே 2005 இதழ் - மலேசியாவில் இந்தியத் தொழிலாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள், இருந்தும் அங்கீகாரமில்லை. காவிரியால் பாலைவனமாக்கப்படுகிறதா தமிழ்நாடு, உலகுக்கு சோறு போடுமா உயிரியல நுட்பம், பத்திரிகையாளருக்குச் சுதந்திரம் இருக்கிறதா? குழந்தை உரிமைக்கான நோபல் பரிசு - என்கிற தரமான விழிப்புணர்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் வெளியான ஒரு மரத்தின் மரணம் சிறுகதை சுவைத்த பக்கங்கள் பகுதியில் உள்ளது. சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக் கருத்துகளடங்கிய தரமான இதழ். H 2 - 30இராணிமங்கம்மாள் காலனி, திண்டுக்கல்



" சுற்றுச் சூழல் புதிய கல்வி " திண்டுக்கல்லிலிருந்து வெளிவரும் இதழ். ஆசிரியர் மெர்சி பாஸ்கர். நியூ எட் வெளியீட்டகத்தின் வெளியீடாக வெளியிடப்படுவது. சூழலியல் தொடர்பான அரிய செய்திகளைத் தொடர்ந்து தருகிற இதழ். இந்தியாவின் புலிகளின் சரணாலயம் என்று கூறப்படும் சரிஸ்காவில் தற்பொழுது ஒரு புலிகூட கிடையாது என்ற கட்டுரை வியப்பூட்டுவதே. நீர் சேகரிக்கும் முறை பற்றிய கட்டுரை அருமையானது. இயற்கை வேளாண்மை பற்றிய செய்தி பயனுடையதே.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,