சென்னை லொயோலா கல்லூரியின் பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்டுள்ள இதழ் இது. இதழ் எண் : 35. ஆசிரியர். ச. ராஜநாயகம். தொலைபேசி : (044)2817 5656 முகவரி: லொயோலா கல்லூரி, சென்னை 34. ஆசிரியர் பக்கத்தில...

"சிலம்பம் என்பது கழிவைத்து ஆடுகிற ஆட்டம். முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சுழற்றித் தாக்கவும், தாக்குதலைத் தடுக்கவும் மேற்கொள்ளும் பயிற்சி. தாக்குதலை இங்கே தாக்கம் என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. பண்பாடு-மக்கள் தொடர்பகத்தின் இதழாக சிலம்பம் இதழ் சமூகத்தின் சாமான்யரது நலனுக்கெதிராக விழுகிற தாக்குதலைத் தடுக்கவும், சாமான்யரைப் பலப்படுத்துகிற சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தவும் ஒரு இடை வேளைக்குப் பிறகு சிலம்பம் மீண்டும் ஆடப்படுகிறது. பல்வேறு தடைகளைக் கடந்து மீண்டும் சிலம்பம் இன்று உங்கள் கையில்.

சிலம்பம் ஒவ்வொரு முறையும் சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சனையை மையப்படுத்திச் சிந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் விடுதலைப் பார்வையிலிருந்து மனித வாழ்வியலைக் கண்ணோக்கும்.

இந்த இதழ் "சினிமாவும் அரசியலும்" என்கிற ஒரு கருப்பொருளை முன்வைத்துச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஒரு சினிமாக்கலைஞர் அரசு நிர்வாகியாக மாறுகிறபோது ஒரு சமூகத்திற்கு ஏற்படுகிற விளைவுகள் என்ன என்று சிந்திக்கிறது. கவர்ச்சியும், கலைத்திறனும் உள்ள ஒரு கலைஞர் அரசு நிர்வாகத்திலும் சிறந்து விளங்குவாரா என்று சிந்தித்துச் செயல்படாது கவர்ச்சியே எதார்த்தம் என்று மயங்கி நிற்கிற நிலை இங்கே இருக்கிறது. இது ஆரோக்கியமற்றச் சிந்தனை என்கிற நோக்கை ஒரு சிந்தனைத் துருவமாக இந்த இதழ் கொண்டுள்ளது. சினிமா தூண்டுகிற உணர்வுகளை அறிவார்ந்த தளத்தில் இட்டு சலிக்கப்பட்டு கூர்மையும், செயலாக்கத்திறன் கொண்ட மனிதர்கள் அரசியலில் அரசு நிர்வாகத்தில் ஈடுபட வேண்டும் என்கிற சிந்தனை நகர்வையும் இந்த இதழ் சொல்கிறது - ஜோ. அருண்.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,