சென்னை வண்டலூர் பெரியார் தமிழ்ப் பேரவை சார்பாக சங்கமித்ரா அவர்கள் இரண்டு இதழ்களை வெளியிடுகிறார். ஒடுக்கப்பட்டோருக்கான குரலாக ஒரு இதழும் வினா விடைக்கான இதழாக ஒரு இதழும் வெளியிடுகிறார். இந்த இதழ் 29 ஆவது இதழ். எப்படி இவரால் முடிகிறது ? பெரியாரின் கருத்துகளை உள்வாங்கி மிகத் தரமான கட்டுரைகளையும், குறிப்புகளையும், ஆய்வுகளையும், கருத்துகளையும் இதழில் வெளியிட்டு ஏராளமான படைப்பாளிகளுக்கு அடித்தளமாக இருக்கும் இவர் - இப்பொழுது ஆற்றுகிற இதழ்ப்பணி வணங்குதற்குரியது. நலிவடைந்த நல்ல மனிதர்களுக்குப் பொருள் திரட்டித் தருவது இவர் செய்கிற உயரிய பணி. அனுபவமும் ஆற்றலும் உடைய இவர் கருத்துகள் நுட்பமானதாக இருந்து பகுத்தறிவுப் பாதைக்கு வழி காட்டுபவை. இந்த இதழை பாவேந்தர் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளார். ஐ.என்.ஏ வில் பணியாற்றிய ஆம்பூர் கோவிந்தம்மாள் அவர்களை அடையாளம் காட்டி வாழ்த்துவது சிறப்பிற்குரியதே. ஒருவினாவுக்கான விடையில் - சர்ச் ஆரம்பிக்கிறான் அவன் திருடறான். கோயில் கட்டறான் அவன் திருடறான். கோவணங்கட்டிகிட்டு நின்னே கோடி கோடியாக சேர்த்த ரமண மகரிசி - கடைசியில் சொத்தை - அண்ணன் மகனுக்கோ - தம்பி மகனுக்கோ எழுதி வச்சான் - எனவே பெயர் - விளம்பரம் எல்லாம் வேணாம். முடிந்தபோது, முடிந்ததை முதியோருக்கும் ஏதிலிகளுக்கும் செய்வோம் - இவரது வரிகள் உண்மையானவை. இதுவே சரியானதும் கூட.
ஆசிரியர் சங்கமித்ரா பெரியாரியல் சிந்தனையாளர். பல ஆண்டுகளாக எழுதுபவர். தொகுப்பு நூல்களை வெளியிடுபவர். இரண்டு இதழ்களை நடத்துபவர். ( ஒடுகப்பட்டோர் குரல், சங்கமித்ரா விடையளிக்கிறார் ). பெரியார் தமிழ்ப் பேரவை நடத்துபவர். இவரது சங்கமித்ரா விடையளிக்கிறார் இதழ் எண் 28 - 2007 டிசம்பர் இதழ் முதுமையை வென்றோர் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. ( இவரது ஒவ்வொரு அணுகுமுறையுமே வியப்பூட்டுவதாக இருக்கும்) ஆழமானவர். கடினமான கருத்தையும் எளிமையாகச் சொல்லுபவர். இதழ் முகவரி 1 429, தென்பெரும் நெடுஞ்சாலை, வண்டலூர் வாயில், வண்டலூர், சென்னை - 600 048 ( கைபேசி - 9841359717 ) தனியிதழ் ரூ10.
பெரியார் தமிழ்ப் பேரவையின் வெளியீடாக வண்டலூர், சென்னையிலிருந்து சங்கமித்ரா அவர்களது முயற்சியில் வெளிவருகிற இதழ். தனியிதழ் ரூ10. சங்கமித்ரா விடையளிக்கிறார் என மக்கள் கேட்கிற வினாவிற்கான விடை மட்டுமே வெளியிட்டு வருகிற இதழ் இது. மிகச் சுவையாக, படிப்பவர்களுக்கு உணர்வேற்றும்படி சிறப்பாக, வெளியிடப்பட்டு வருகிற இதழ் இது. தனிச்சுற்றுக் காலாண்டிதழாக இதழ் வெளிவருகிறது. தெரிவி - தூண்டு - மேம்படுத்து என்கிற தலைப்பு முழக்கத்தோடு இதழ் வெளியிடப் படுகிறது. நிகழ்வுகளின் நிழற்படங்களை இதழில் வெளியிட்டு சிறப்புச் செய்கிறது. கல்வியில் இடஒதுக்கீடு நாமம் தானா? சி.வி.நாகேஷ், பெங்களூர் வினாக்கேட்க அதற்கு சங்கமித்ரா - அதுக்குத்தான் நானும் ஆனைமுத்துவும் 18-8-06 முதல் 23-08-06 வரை டெல்லியில் முகாமிட்டோம். ஒன்னும் நம்பிக்கையில்லை - இப்படி கேட்பவருக்கு இயல்பாக விடையளித்து விளக்குகிற தரமான இதழ் இது. கார்த்திகை தீபம் என்று நெய்யை விரயம் செய்கிறார்களே? என்கிற இரா இரவியின் வினாவுக்கு - பார்ப்பனர் வடிவமைத்து வழிநடத்தும் இந்திய சமூகப் பொருளாதார அரசியலில் 97 விழுக்காடு - இந்தியர்களின் வாழ்வே விரயம். நெய் மட்டுமா ? என்கிற விடை எத்தனை நுட்பமானது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |