சென்னை 13 லிருந்து கடலியல், கடல் உயிரியல், கடல் தொழில் தொடர்பாகத் தமிழில் வரும் ஒரே திங்களிதழ் இது. விழி எழு ஒன்றுபடு என தன் மக்களுக்கு அழைப்பு விடுக்கிற இதழ் இது. பதிவு பெற்ற அச்சிதழ். கடந்த 21 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர் விஜயா வேலாயுதம் அவர்கள். துணுக்குச் செய்திகளாக கடல் சார்ந்த அரிய பல்வேறு வகையான கருத்துருக்கள் இதழில் இடம் பெற்றுள்ளன. செய்தி அலைகள் என கடல் சார்ந்த செய்திகளை வரிசைப்படுத்தியுள்ளது சிற்றிதழ்களுக்கான இலக்கணமாக அமைந்துள்ளது. குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த "எங்கள் இனத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள்" என்ற கட்டுரை உழைக்கும் மக்களை ஏமாற்றுகிற தன்மையை மிகச் சரியாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் கடலோரக் காவல் படையைப் பற்றிக் குறிப்பிட்டு, இலங்கைக்கு உதவி செய்வதை இந்திய அரசு நிறுத்த வேண்டும் என்ற செய்தியைச் சொல்லி - தமிழக., தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கான கண்டனத்தையும் தெரிவிக்கிறது. இதழ் தொடர வாழ்த்துகள். கடந்த 19 ஆண்டுகளாக கடல் சார்ந்த கருத்து விதைப்பிற்காகவும், கடலில் பணியாற்றும் மக்களுக்கான உரிமைக் குரலாகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் திங்களிதழ் இது. சென்னையிலிருந்து வெளிவரும் இந்த இதழின் ஆண்டுச் சந்தா ரூ50. இந்த இதழில் வெளிவந்துள்ள சிங்காரவேலரும் வடஇந்திய இரயில்வே போராட்டமும் என்ற கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. கடலில் வாழும் மீன்கள், வியத்தகு செய்திகள், கடல் பணிக்கான உதவிகள், வழிமுறைகள், என மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு இதழைத் தொடர்ந்து வருகிறது. மன்னார் கடல் பகுதியில் மீன்பிடிக்க இலங்கை தடை என்ற குறிப்பை வெளியிட்டு, இது தமிழக மீனவரைப் பாதிக்கும் என்று விளக்கியுள்ளது அருமையானது. உயிரைப் பணயம் வைத்து கடல் தொழில் புரியும் மீனவர்களது உணர்வை ஆட்சியாளர்கள் உணருவார்களா? தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |