கணினிச் செய்திகளை வெளியிடும் தமிழ்த் திங்களிதழ் " கம்ப்யூட்டர் உலகம் " ஏழாவது ஆண்டை நிறைவுசெய்யும் கணினி இதழ். ஆசிரியர் ஏ.எசு.மகேந்திரன். சென்னையிலிருந்து வெளிவரும் இந்த இதழில் கணினி தொடர்பான பல புதிய செய்திகளைக் கொண்டுள்ளது. எளிமையான நடையில், நிறைய படவிளக்கங்களுடன் கணினிச் செய்திகளை வெளியிடுகிறது. பயனுள்ள குறிப்புகளைக் கொடுப்பதோடு, புதிய வரவுகளையும் பட்டியலிட்டு வருகிறது. இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்பட நுட்பம் நிறைந்த படங்களையும் வெளியிடுகிறது. ஆங்கில அகராதிக் குறுவட்டினை இந்தமாத இலவச இணைப்பாக இணைத்துள்ளது.





சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து - மகேந்திரன் ஆசிரியராக இருந்து - வெளியிடுகிற கணினி தொடர்பான அருமையான இதழ். கணினித் தகவல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிற குறையைப் போக்கத் தமிழில் தொடர்ந்து இந்த இதழை வெளியிட்டு வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த இதழ் தொய்வின்றித் தொடர்ந்து வருகிறது. இதழின் இணைப்பாகக் குறுவட்டுகளையும் அளித்து வருகிறது. புதியதாக வரும் கணினிச் செய்திகளை இதழில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த இதழின் அட்டையில் திருமிகு ஆண்டோ பீட்டர் அவர்களது - படத்தினை வெளியிட்டுள்ளது. விசுவல் மீடியாவில் நிரந்தர வேலைவாய்ப்பு... பயிற்சியில் சேரும் அனைவருக்கும் லேப்டாப் இலவசம் - என்ற அறிவிப்புடன் - சாப்ட்வியூ நிறுவனத்தின் செயற்பாடுகளை இவர் இதழில் விளக்கியுள்ளார். கணினித் துறையில் இத்தனை அறிமுகங்களா என்று வியக்கும் வண்ணம் ஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு தொழில் நுட்ப நுணுக்கங்களை விவரித்து வருகிறது. இதழ் தொடர வாழ்த்துகள்.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,