சென்னையிலிருந்து ஆ.கோ.குலோத்துங்கன் அவர்களது தொடர் உழைப்பால் கடந்த 17 அண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிற இதழ். இந்த இதழ் பொங்கல் மலராக மலர்ந்துள்ளது. இதழில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் இதழ் படிப்பவர்களின் வினாவுக்கான விடையைத் தருகிறார். கண்ணியம் வினாவுக்கான விடையை தமிழ்ப் பெருமக்கள் எழுதியுள்ளார்கள். மரபுப்பாக்களை ஊக்குவிக்கும் வகையில் இணைக்குறள் ஆசிரியப்பாவை இந்த இதழில் படைப்பாளிகள் படைத்துள்ளார்கள். பாக்கள் எழுதுவது எப்படி என்ற தொடரை புலவர் வெற்றியழகன் எழுதுகிறார். இநத இதழில் பட்டுக்கோட்டையாரின் துணைவியார் திருமதி கெளரவாம்பாள் அவர்களை நேர்காணல் கண்டு எழுதியுள்ளது. இவள் கிழக்கு அவள் மேற்கு என்ற அய்க்கண் அவர்களின் சிறுகதை இடம்பெற்றுள்ளது, இயற்கை உணவு தயாரிக்குமமுறை பற்றி கோ.பூங்கோதை எழுதியுள்ளார். இதழில் சிந்தனைக் களம் என்று இதழின் இயக்க நிகழ்வுக் குறிப்பும் காணப்படுகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கட்டுரை இதழில் மறுபிரசுரம் ஆகியுள்ளது, இந்த இதழின் அட்டையில் உச்சநீதி மன்ற நீதியரசர் அரு. இலக்குமணன் அவர்களது படமும் 71 ஆம் பக்கத்தில் அவர் பற்றிய குறிப்பும் உள்ளது. நல்லி குப்புசாமி பற்றியும் படத்துடன் இதழில் குறிப்பிடப் பட்டுள்ளது. கழுத்து வலிக்கான மருத்துவக் குறிப்பும் உள்ளது, கங்கை கொண்ட சோழபுரத்தின் தொன்மையும் பெருமையும் என்று வை.சுந்தரேச வாண்டையார் அவர்களால் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சான்றாதாரங்களாகப் புகைப்படங்களுடன், ஆய்வுக் குறிப்புகளுடன் இக் கட்டுரை வெளியாகி இருந்தால் பயன் மிகுந்திருக்கும். இதழில் மரபுப் பாக்களும். உரை வீச்சுகளும். துணுக்குச் செய்திகளும் உள்ளன. இதழ் தொடர வாழ்த்துகள் - பொள்ளாச்சி நசன் -



1970 களிலிருந்து ஆ.கோ.குலோத்துங்கன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இதழ் கண்ணியம். சமூக கலை இலக்கியத் திங்களிதழ். இந்த இதழில் வணங்குதற்குரிய திருமிகு அனைமுத்து அவர்களது படத்தினையும் அவரது துணைவியார் சுசீலா அவர்களது படத்தினையும் வெளியிட்டுள்ளது. நிறைய துணுக்குச் செய்திகளோடு, மொழி உணர்வு, விழிப்புணர்வு, சமுதாய முன்னேற்றம், புதிய ஆக்கல் என்கிற பல்வேறு அணுகுதல்களோடு இதழ் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. படைப்பாளிகளை நான் ஏன் எழுதுகிறேன் என எழுத வைத்து அதனைத் தொகுப்பு நூலாக்கி வெளியிட்டு வருகிறது. என் அடிச்சுவடு என இதழாசியரியர் எழுதுகிற தொடர் வரலாற்றை காண பதிவு செய்ய உதவுதாக இருக்கும். மரபுப் பாக்கள், புதுப்பாக்கள், துணுக்குகள் எனச் சுவையாக இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.



சென்னையிலிருந்து குலோத்துங்கன் அவர்களால் வெளியிடப்படும் இதழ். அட்டையில் வானொலி வழியாக மக்களை ஈர்த்து கருத்தேற்றுகிற தென்கச்சி சுவாமிநாதன் அவர்களை வெளியிட்டுள்ளது. நுட்பமான தொடர்களையும், துணுக்குச் செய்திகளையும் தொடர்ந்து வெளியிடுகிறது. பன்முக ஆற்றலோடு தமிழ் தமிழர், ஒடுக்கப்பட்ட மக்கள் என இயங்கி வருவது.



கண்ணியம்: கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து வணிக நோக்கமின்றி தமிழ் தமிழர் தொடர்பான செய்திகளை முதன்மைப் படுத்தி வெளிவருகிற திங்களிதழ். மரபுப்பா போட்டி, நான் ஏன் எழுதுகிறேன், அண்ணாவின் நகைச் சுவை எனத் தரமான தொடரை வெளியிட்டு வருகிறது.



கண்ணியம் : திங்களிதழ். தரமான தமிழியக் குறிப்புகளுடன், உரைவீச்சு ஆசிரியப்பா போட்டி, தரமான நுட்பமான கருத்துச் செறிவுத் தொடர்களுடன் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கக்கூடிய இதழ்.



கண்ணியம் கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து தொய்வின்றி ஆ.கோ.குலோத்துங்கன் அவர்களது தொடர் முயற்சியால் வெளிவரும் தரமான தமிழ் உணர்வூட்டும் இதழ் இது. பகுத்தறிவுக் கருத்துகளை விதைப்பதோடு நான் ஏன் எழுதுகிறேன் எனப் படைப்பாளிகளை எழுதவைத்து வெளியிடுவது



சமூக கலை இலக்கிய பல்சுவைத் திங்களிதழ். பல்வேறு தரப்பிரையும் இணைத்து, அவர்களது ஆற்றலை இதழில் வெளிப்படுத்தி, உறவுப்பாலம் அமைக்கிற இதழ். இதழின் அட்டையில் தமிழுணர்வாளர்களது படங்களை வெளியிட்டும், உள்ளே நான் ஏன் எழுதுகிறேன் என்று அவர்களை எழுதவைத்தும் தொடருகிற இதழ். தமிழ் மருத்துவம், மரபுப்பாடல்கள், நூல் அறிமுகம், துணுக்குகள் எனப் பல்சுவையாக இதழ் தொடருகிறது. இடர்பாடுகள் வந்தபொழுதும் கலங்காது தொடர்ந்து இதழ் நடத்தியவர் இவர்.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,