கணையாழி: தசரா அறக்கட்டளையின் சார்பாக வெளிவரும் இதழ். சிறுகதை, கட்டுரை, கவிதை என இலக்கியத் தரமான கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிடுகிற இதழ். 11.நானா தெரு, தி.நகர், சென்னை 17. இணைய முகவரி : www.kanaiyazhi.com



இலக்கியத் தரமாக, புதிய நுட்பத்தில் இந்த மாத கணையாழி வெளிவந்துள்ளது



தசரா பொறுப்பில் பதினோராம் ஆண்டில் கை வைக்கிறது கணையாழி, கடந்து போன பத்தாண்டுகளில் தசராவின் கணையாழிக்கு முடியாமல் போன பட்டியல் உண்டு.... பத்தாண்டுகளில் கணையாழி பாய்ஸ் கவனத்தை ஈர்க்க முடியவில்லை, இரட்டை அர்த்த காம சேஷ்டைகளில் சொற்களைக் குலுக்கியாட்டி அப்பாவி விடலைப் பசங்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தனிப்பட்ட முறையில் தங்களை முன்னிருத்தித் தனக்குப் புகழோ பொருளோ சேர்த்துக் கொள்ள தசராவிற்கு முடியவில்லை. படைப்பாளிக்கும் பக்திக்கும் பற்றுக்கும் மோதலுக்கும் கூட்டணித் சேர்தலுக்கும் களம் அமைக்கவோ தளமாகவோ முடியவில்லை, யாருக்கும் ஊதுகுழலாக இருக்க முடியவில்லை .....இப்படித் தொடருகிறது கணையாழியின் ஆசிரியர் உரை... இப்படித் தனித் தன்மையோடு வெளியிடுகிற கணையாழி காலம் கடந்தும் இலக்கிய வரலாற்றில் பேசப்படும், போற்றப்படும், வணங்கப்படும்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,