ஊற்று. பெங்களூரிலிருந்து பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் தொடர்பாக வெளிவருகிற திங்களிதழ். சங்கம் தொடர்பான செய்தியை மட்டுமல்லாது - தமிழியச் செய்திகளையும் இது இதழில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த இதழில் வெளியிட்டுள்ள க.ப.சின்னராசு - அவர்களது கட்டுரை இந்தியப் பண்பாட்டின் தொடக்கமே தமிழர் பண்பாடு என்ற கட்டுரை - தமிழியச் சான்றுகளை மிகச் சரியாக காட்டி விளக்குகிறது. இந்த இதழின் அட்டையில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த தண்.கி.வேங்கடாசலானார் அவர்களது புகைப்படமும், உள் அட்டையில் 2008 - 2010 ஆம் ஆண்டிற்கான செயற்குழுவினர் புகைப்படமும் உள்ளது,



பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பு இதழாக, இலக்கிய நுட்பங்களை, தரமான படைப்புகளை, தமிழிய உணர்வுகளை விதைக்கிற இதழாக இந்த இதழ் பெங்களூரிலிருந்து தொடர்ந்து கடந்த 31 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப் படுகிற ஆசிரியர் குழுவின் தன்மையைப் பொருத்து வடிவமைக்கப்படுகிறது. தற்பொழுது ப.சண்முகசுந்தரம் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து வெளியிடுகிறார். இதழின் அட்டையில் தனித்தமிழுக்காகப் பாடுபட்டு, இறுதிவரை கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து மறைந்த (10-3-1933 - 01-07-1995) பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது படத்துடன் பாடலையும் வெளியிட்டுள்ளது. இந்திய நாட்டு விடுதலையும் தமிழர் பங்கும் என்ற மதலைமணி அவர்களின் தொடர் வாழ்த்துதற்கரியதே. இதழ் நடப்புச் செய்திகளையும், தமிழ் உணர்வுக் குறிப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது, இதழ் தொடர வாழ்த்துகள்.



ஊற்று : பெங்களூர்த் தமிழ்ச் சங்க ஏடாகத் தொடர்நது உணர்வோடு உறுப்பினர்களுக்கு உதவுகிற வகையில் வெளிவந்து கொண்டிருக்கிற திங்களிதழ். ஒவ்வொரு திங்களும் இதன் அட்டையில் வெளியாகும் சங்கப்பாடல்கள் அறிமுகம் இளம் தலைமுறையினரை வளர்த்தெடுக்கிற உயரிய செயல். ஆசிரியர் : இளவழகன்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,