ஓர் அன்பான வேண்டுகோள்.

பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் வளர்ச்சிக்காக, தமிழின் பரவலுக்காக, தமிழின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக, இயங்கிச், செல்லும் இடங்களிலெல்லாம் எடுத்துச் சொல்லித், தமிழ் வளர்த்த சான்றோர்கள் பலர்.

ஆனால் அவர்களது பெயரை, அவர்களது இயக்கத்தை, அவர்களது பதிவுகளைப், பாதுகாத்து அதன் தொடரியாக இந்தத் தமிழ் உலகம் இயங்கவில்லை.

அது மட்டுமல்ல, அவர்களது பெயரையே இந்தத் தமிழ் உலகம் மறந்தும் போனது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்து இயங்கியவர்கள் யார் என்பது இன்றைய தலைமுறையினருக்கே தெரியாது.

தற்புகழ்ச்சியும், சுயநலமும் இன்றித், தமிழுக்காகத் தரமாக இயங்கியவர்கள், தமிழாகவே வாழ்ந்தவர்கள் பற்றிய குறிப்புகளைத் தமிழம்.வலை வரிசைப்படுத்த விரும்புகிறது.

உலகம் முழுவதும் வாழ்ந்த, இந்த அறிஞர்களின் புகைப்படங்களுடன் கூடிய குறிப்பினை எமக்கு அனுப்பி வைத்தால் அவற்றை இந்தப் பகுதியில் இணைத்துப் பாதுகாக்க விரும்புகிறேன்.

தொடர்புக்கு - பொள்ளாச்சி நசன், pollachinasan@gmail.com. 9788552061.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?

1. உங்கள் பெயர், முகவரி, பணி, மின்அஞ்சல், ஆகியவற்றை எனக்கு அனுப்பிப் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும்.

2. உங்கள் பகுதியில் வாழ்ந்த, வாழுகிற தமிழ் அறிஞர்களின் பெயர், முகவரி, புகைப்படம், அவர் வெளியிட்ட நூல்கள் / தமிழியச் செயற்பாடுகள் பற்றிய குறிப்புகளைத் திரட்டி எனக்கு அனுப்பி வைக்கவும்.

3. உங்கள் மாவட்டத்திற்கு உரிமையாளர் நீங்கள்தான். நீங்கள் அனுப்புகிற செய்திகள் உங்கள் பெயரிலேயே பதிவு செய்யப்படும்.

4. கால நிர்ணயம் இல்லை. விரைந்து அனுப்பினால் அவை வரிசைப்படுத்தப்பட்டு இணையத்தில் இணைக்கப்படும்

5. அனுப்ப வேண்டிய மின்அஞ்சல் முகவரி :- pollachinasan@gmail.com

NOOL LIST
சங்க காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டுவரை உலக அளவில் பாதுகாக்க விடுபட்ட நூல்கள் பட்டியல் PDF பெறச் சொடுக்கவும்.
இணையம் காண,

நாளிதழ் காண,