திருக்குறள் படித்தல் - (ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)
( F11 ஐ அழுத்தவும். முழுத்திரையில் காணலாம் )

இந்த உலகில் பிறந்த ஒவ்வோர் உயிரியும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறது. மாந்தர்களில் பலரும், பல்வேறு புறச்சூழல்களில் சிக்கித் தவித்து, அகத்தை நெறிப்படுத்த இயலாது, கலங்கி, உழன்று, இறுதிவரை துன்பச்சேற்றிலேயே மூழ்கி மூழ்கி, மாண்டு போகின்றனர். மகிழ்வாக வாழ அகமும், புறமும் நெறிப்படுத்தப்பட வேண்டும். இதுதான் பண்டைய தமிழர் கண்ட வாழ்முறை. அந்த வாழ்முறைக்கான பண்புக்கூறுகளை வரிசைப் படுத்துவதே திருக்குறளின் நோக்கம்.

ஒவ்வொரு திருக்குறளைப் படிக்கும்பொழுதும் இந்த நினைவுகளுடனேயே படிக்கவும். ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு வாழ்முறையாக உங்களுக்குள் பதிய வைத்துக் கொள்ளவும். 1330 குறள்களில் தொடக்க நிலையாகத் தாங்களாகவே எளிமையாகப் படித்து உணரக்கூடிய 303 குறள்களை அறிமுகம் முதல் பக்கம் 19 வரை இந்தப் பக்கத்தில் இணைத்துள்ளேன். ஒவ்வொன்றாகச் சொடுக்கி உள்ளே நுழைந்து குறளைப் படித்து, இசையோடு கேட்டு, பொருள் உணர்ந்து, உங்களது வாழ்க்கையின் பாதைக்கு அடித்தளமிடவும்.

அறிமுகம்
எளிமையானது 01
எளிமையானது 02
பக்கம் 01
பக்கம் 02
பக்கம் 03
பக்கம் 04
பக்கம் 05
பக்கம் 06
பக்கம் 07
பக்கம் 08
பக்கம் 09
பக்கம் 10
பக்கம் 11
பக்கம் 12
பக்கம் 13
பக்கம் 14
பக்கம் 15
பக்கம் 16
பக்கம் 17
பக்கம் 18
பக்கம் 19
திருக்குறள் பயிற்சிக்கான பயிற்சிக் கட்டகமாக இதனைப் பயன் படுத்துபவர்கள் அருள்கூர்ந்து கீழுள்ள படவடிவக்கோப்பினை இறக்கி, அச்சாக்கி, பயிற்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 300 திருக்குறளுக்கான 21 பக்கங்களைக் கொடுக்கவும்.

ஒவ்வொரு குறளையும் தனித் தனிச் சொல்லாகப் படிக்கவும்.... சொற்களுக்கான பொருளை ஒவ்வொன்றாகக் கண்டறியவும்....
சொற்களுக்கான பொருளை ஒன்றாக இணைத்துச் சொல்லவும்., இதுவே அந்தக் குறளுக்கான திரண்ட பொருளாக அமையும்....
குறள் வழியிலான இந்தப் புரிதலை, உங்களது வாழ்க்கையில் கண்ட நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கவும்....
நீங்கள் கண்டறிந்த இந்தப் புரிதலை இணைத்து ஒரு கதைபோல அடுத்தவருக்குச் சொல்லவும்....
இப்பொழுது நீங்கள் படித்த அந்தத் திருக்குறள் உங்களுக்குள் நன்றாகப் பதிந்துவிடும்.
உங்களுக்குள் பதிந்த அந்தக் திருக்குறளின் கருத்தினை இனி உங்களது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தத் தொடங்குங்கள்.


அன்புடன், பொள்ளாச்சி நசன், தமிழம்.வலை., தமிழம்.பண்பலை. பேச 9788552061, 8667421322 மின் அஞ்சல் pollachinasan@gmail.com