"Acrobat Reader" என்ற மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ..

நாள் ஒரு நூலில் உள்ள - படவடிவக் கோப்புகளைக் கணினியில் பார்க்க "Acrobat Reader" என்ற மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் இங்கே இலவசமாகத் தரவிறக்கலாம். மென்பொருள் இலவசம்தான். தரவிறக்கி, நிறுவிப் படிக்கவும். இலவசமாகத் தரவிறக்க இங்கே சொடுக்கவும்..


படவடிவக் கோப்புகளை உருவாக்க வருடும் முறை

நூல்களை வருடுவதற்கு cannon lide25 என்ற வருடியைப் பயன்படுத்தவும். இது பழைய பக்கங்களை வருடும் பொழுது அதிக கருப்புப் புள்ளிகள் இல்லாமல் வருடிக் கொடுக்கும். எனவே இந்த வருடியைப் பயன்படுத்தவும். வருடியில் உள்ள bright / dark பயன்படுத்திப் பக்கங்கள் தெளிவாக இருக்குமாறு வருடவும், பக்கங்கள் சாய்வாக இல்லாமல், ஒழுங்காக ஒரே நேர்கோட்டில் அமைந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வருடும் பொழுது வருடியின் மீது கெட்டியான துணி போட்டு மூடி, வருடியினுள் வெளிச்சம் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

புத்தகத்தின் கட்டமைப்பைப் பிரித்து தனித் தனியான பக்கங்களாகவோ அல்லது இரண்டு பக்கங்கள் அருகருகில் உள்ளதாகவோ - வருடியின் மேல் வைத்து, ஒவ்வொரு பக்கங்களையும் வருடவும். வருடியின் மேலே நன்றாக அழுத்திப் பிடித்துக் கொண்டால் பக்கங்கள் மடங்காமல் இருக்கும்.

நூலில் தெளிவாக அச்சாகாத பக்கங்களை கருப்பு வெள்ளையில் வருடினால் ஒன்றுமே தெரியாது / (கருப்பாக இருக்கும் அல்லது ஒன்றுமே தெரியாது ) இவ்வாறான பக்கங்களை கருப்பு வெள்ளையில் வருடாமல் அதனை வண்ணத்தில் வருடலாம்.

பொதுவாக புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களையும் கறுப்பு வெள்ளையில் வருடுவதே சரியானது. (black and white) இப்படி வருடினால் குறைவான MB யில் படவடிவக் கோப்பு அமையும். பக்கங்களை Bit Map (BMP) ஆக வருட வேண்டும். அப்பொழுதுதான் எவ்வளவு பெரிதாக்கினாலும் எழுத்து உடையாது. கருப்பு வெள்ளையில் வருடும் பொழுது 300 dpi வைக்கவும். ஏனெனில் இனிவரும் காலங்களில்., உருவாகவுள்ள OCR வழி, பக்கங்களை எழுத்தாக மாற்ற எளிமையாக இருக்கும். (300 இல் செய்யும் பொழுது கூடுதல் இடம் ஆகும் இருந்தாலும் OCR பயன்பாடு கருதி 300 dpi இல் வருடவும்)

நூலின் அட்டை (முன் / பின்) பக்கங்களை வண்ணத்தில் வருடலாம். அதற்கு 100 dpi வைத்தால் போதுமானது.

1. Black and white (கறுப்பு வெள்ளை) யில் பக்கங்களை வருட வேண்டும் ( கிரேயில் வருடக்கூடாது)
2. பக்கங்களின் அளவைச் சுருக்கக்கூடாது. (100%) முழு அளவினதாக இருக்க வேண்டும்.
3. பக்கங்கள் நேராக வைத்து வருட வேண்டும்/
4. Black and white ல் வருடும் பொழுது 300 டிபிஐ அளவுடையதாக இருக்க வேண்டும்
5. வருடும் பொழுது (கறுப்பு வெள்ளையில் வைத்து) (அதிக கறுப்பாக இருந்தால் கான்ட்ராஸ்ட் குறைக்கலாம்)
அனைத்துப் பக்கங்களையும் வருடி முடித்த பிறகு பக்கங்களின் ஒரத்தில் உள்ள கறுப்புப் புள்ளிகளை போட்டோ ஷாப்பில் வைத்து அழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகாக இருக்கும்.
6. அட்டை மற்றும் வண்ணப் பக்கங்களை 100 டிபிஐ வைத்து வருட வேண்டும்
7. வருடும் பக்கங்கள் அனைத்தும் ஒரே அளவினதாக இருக்க வேண்டும்
8. வருடிய பக்கங்களை வரிசைப்படுத்தி, Acrobat Writer என்ற மென்பொருளின் உதவியால் வரிசையாக பக்கங்கள் வருமாறு படவடிவக்கோப்பினை உருவாக்கிக் கொள்ளலாம். 9. மேலே குறிப்பிட்டுள்ளவையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் அருள்கூர்ந்து மடல் எழுதவும். அடுத்த தலைமுறையினருக்காகத் தமிழில் வெளிவந்த நூல்களையும், இதழ்களையும் படவடிவக் கோப்புகளாக்குகிற இந்த முயற்சியில் நீங்களும் இணைய அன்போடு அழைக்கிறேன்.

விரும்பினால், உங்கள் வருடியில் ஒன்றிரண்டு பக்கங்களை வருடி என் மின் அஞ்சல் முகவரிக்கு pollachinasan@gmail.com அனுப்பவும் அதில் உள்ள குறை நிறைகளைச் சொல்லுகிறேன்
பிறகு நீங்களும் வருடத் தொடங்கலாம்

அன்புடன்
தமிழ்க்கனல், தமிழம்.வலை. கைபேசி எண் 97 88 55 20 61
மின் அஞ்சல் pollachinasan@gmail.com, Skype ID : pollachinasan1951