உ, ஊ - வரிசை உயிர்மெய் எழுத்துகளை
எளிமையாக அறிந்து கொள்ள
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

அன்புடையீர் வணக்கம்

தமிழ் எழுத்துகளில் உ, ஊ - வரிசை எழுத்துகள்
புதிய வடிவம் பெறுகின்றன.

எனவே தொடக்கத்தில் ஈ - வரிசைக்குப் பிறகு
மாணவர்களுக்கு இந்த எழுத்து வரிசைகளைச்
சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களால்
இந்த எழுத்துகளை நினைவில் நிறுத்த இயலவில்லை.
இதன் தொடரியாக அடுத்து வரும் எழுத்துகள்
அனைத்தும் கடினமானதாகி, புரிதலில் சிக்கலை
ஏற்படுத்துகிறது. 60 விழுக்காடு மாணவர்களின்
நிலை இதுதான். எனவே தான், நான் அறிமுகப் படுத்துகிற
இந்த அணுகுமுறையில் உ, ஊ வரிசை எழுத்துகளை
பாடத்தின் இறுதியாக வைத்துள்ளேன்.

உ - வரிசை எழுத்துகளை எளிமைப்படுத்துவது
எப்படி என்று இப்பொழுது பார்ப்போம்

உ - வரிசை எழுத்துகளில் மூன்று குறியீடுகளைப் பார்க்லாம்.

.................. ..................

முதல் குறியீடு, எழுத்துகளோடு இணைந்து
புதிய எழுதுகள் எப்படி உருவாகின்றன என்று இப்பொழுது பார்ப்போம்.



முதல் குறியீடு இணைந்து 5 எழுத்துகள் உருவாகின்றன.
அவை முறையே சு, பு, யு, வு, ஙு
இந்த 5 எழுத்துகளில் யு, வு, ஙு எழுத்துகள் அதிகம்
பயனாகுவதில்லை. எனவே இந்த மூன்று
எழுத்துகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். மற்ற
இரண்டு எழுத்துகளைத் தெரிந்து கொண்டு அந்த
எழுத்துகளில் உருவாகும் சொற்களைப் படித்து
அறிவதே போதுமானது. எடுத்துக்காட்டு

சுவர், சுட்டி, சுண்டல், சுறுசுறுப்பு, சுக்கு

புல், புகை, புரம், புரட்டு, புதிய, புலம்

இரண்டாவது குறியீடு, எழுத்துகளோடு இணைந்து
புதிய எழுதுகள் எப்படி உருவாகின்றன என்று இப்பொழுது பார்ப்போம்.



இரண்டாவது குறியீடு இணைந்து 6 எழுத்துகள் உருவாகின்றன.
அவை முறையே கு, டு, ரு, ளு, ழு, மு
இந்த 6 எழுத்துகளில் ளு, ழு, எழுத்துகள் அதிகம்
பயனாகுவதில்லை. எனவே இந்த இரண்டு
எழுத்துகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். மற்ற
நான்கு எழுத்துகளைத் தெரிந்து கொண்டு அந்த
எழுத்துகளில் உருவாகும் சொற்களைப் படித்து
அறிந்து கொள்க. எடுத்துக்காட்டு

குடி, குளி, குதி, குப்பை, குளம், குவளை

படு, பாடு, தேடு, வடு, நடு, ஆடு, கொடு, எடு

பருப்பு, நெருப்பு, செருப்பு, தெரு, வருவாய்

முட்டை, முனை, முள், முகம், முன், முத்து

மூன்றாவது குறியீடு, எழுத்துகளோடு இணைந்து
புதிய எழுதுகள் எப்படி உருவாகின்றன என்று இப்பொழுது பார்ப்போம்.



மூன்றாவது குறியீடு இணைந்து 7 எழுத்துகள் உருவாகின்றன.
அவை முறையே து, நு, லு, ணு, று, னு, ஞு
இந்த 7 எழுத்துகளில் ஞு, நு, எழுத்து அதிகம்
பயனாகுவதில்லை. மற்ற ஐந்து எழுத்துகளைத் தெரிந்து
கொண்டு அந்த எழுத்துகளில் உருவாகும் சொற்களைப்
படித்து அறிந்து கொள்க. எடுத்துக்காட்டு

எது, புது, துணி, தும்மல், துணை, துக்கம், துண்டு

சொல்லு, நில்லு, முதலிலும், வழியிலும்,

கணு, நுணுக்கம், துணுக்கு, ஆணுக்கு, கண்ணுக்கு

வறுவல், நாறு, சோறு, சேறு, பயறு, செறுக்கு

மனு, நானும் நீயும், வானுலகம், தன்னுடைய

இதுபோலவே ஊ - வரிசை உயிர் மெய்எழுத்துகளையும்
மூன்று குறியீடுகளில் பொருத்திப் பார்த்து அறிந்து கொள்க.

ஊ - வரிசை உயிர் மெய் எழுத்துகளில் உள்ள
மூன்று குறியீடுகளை நாம் கீழே காணலாம்.

ஊ - வரிசை எழுத்துகளில் மூன்று உள்ள குறியீடுகள்.

.................. ..................

கூடுதலான புரிதலுக்காக வழக்கமான
சொற்கள் பட்டியலில் உள்ள உ, ஊ - வரிசை எழுத்துகளையும்
குறியீடுகளில் வரிசைப் படுத்தப் பட்ட உ, ஊ - வரிசை எழுத்துகளையும்
கீழே இணைத்துள்ளேன். பார்க்கவும்.


//////////////////////////////////////
மேலே உள்ள ஆறு குறியீடுகளும் இணைந்து உருவான
18 உ - வரிசை உயிர்மெய் எழுத்துகளையும்,
18 ஊ - வரிசை உயிர்மெய் எழுத்துகளையும்,
இப்பொழுது புரிந்து கொண்டோம் அல்லவா ?

கீழே வரும் ஒவ்வொரு எழுத்துகளையும் நீங்களாகவே
ஒலித்துப் பார்க்கவும். அனைத்து எழுத்துகளும் உங்கள்
மனதில் பதிந்து இருந்தால், உங்களால் சரியாக
ஒலிக்க முடியும். அதிகம் பயனாகாத எழுத்துகளைப்
பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

சொற்களில் வரும்பொழுது அவற்றை மீள்பார்வை
செய்து கொள்ளலாம்.

உ - வரிசை உயிர்மெய் எழுத்துகள்

,

ஊ - வரிசை உயிர்மெய் எழுத்துகள்

,