பாட்டுவழியில் எழுத்துகளைப் படிப்போமா





தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது

பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறைய கொடுக்கிறது

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போல பழம் தருது

அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போல பழுக்கிறது

சின்னஞ் சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே.



இந்தப் பாடலின் வழியாகக் கற்றுக் கொள்ளும் எழுத்துகள்,

  • (க்) - த், ன், ல், ர், ட், ய், ம், ங், ள், க், ப், ஞ், ண்,
  • (அ) - த, ள, ற, ப, ழ, க, ய, ல, ம, ண, ன, வ, ந,
  • (ஆ) - தா, யா, பா, மா, வா, லா, கா, நா,
  • (இ) - இ, கி, டி, நி, வி, சி,
  • (ஈ) - நீ
  • (உ) - யு, ரு, து, வு, டு, மு, ழு, று, னு,
  • (ஊ) -
  • (எ) - தெ, செ,
  • (ஏ) - மே, பே, னே,
  • (ஐ) - வை, னை, லை, றை, கை, ளை, யை,
  • (ஒ) - கொ, மொ,
  • (ஓ) - யோ, போ,
  • (ஒள)-




    தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,