( சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள தொடர்கள்தான் அளவுகோல்கள் )
நிலை
|
தமிழ்
|
ஆங்கிலம்
|
சூழலிலுள்ள பிற மொழி
|
மழலையர் நிலை
|
ஊக்கச் செயற்பாடுகள், அடிப்படையான எழுத்துகள் அறிமுகம், ஒழுங்கு, கட்டுப்பாடு
|
இல்லை
|
இல்லை
|
முதல் நிலை
|
தமிழ் எழுத்துகள் அறிமுகம், செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை, இணைத்துப் படித்தல், சொற்கள் படித்தல், செய்தித்தாள் படித்தல், சிறுவர் பாடல்களை அபிநயத்துடன் பாடுதல், நடித்தல்
|
இல்லை
|
இல்லை
|
இரண்டாம் நிலை
|
எளிய உரையாடல், சூழலுக்கு ஏற்ப உரையாடுதல், நடித்தல், சிறுவர்கதை படித்தல், சிறுவர் பாடல்கள் அபிநயத்துடன் பாடுதல், எளிமையான சங்கப் பாடல்களும், தற்காலப் பாடல்களும் அறிமுகம் செய்தல்
|
இல்லை
|
இல்லை
|
மூன்றாம் நிலை
|
எளிய சிறுகதை படித்தல், எளிய கவிதை படித்தல், படித்தவற்றை சிறு தொடர்களாக எழுத ஊக்குவித்தல், சிறுவர்களுக்கான சங்ககால, தற்கால இலக்கியப் பாடல்கள் அறிமுகம். மாணவர்கள் பாடல் பாடுதல், பாடலை உணர்தல்,
|
ஆங்கிலத்தில் எளிய பாடல்கள் அறிமுகம், ஆங்கில எழுத்துகள் அறிமுகம், செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை, இணைத்துப் படித்தல், சொற்கள் படித்தல், செய்தித்தாள் படித்தல்
|
இல்லை
|
நான்காம் நிலை
|
கதை படித்தல், கவிதை படித்தல், உரைநடை படித்தல் - படித்துப் புரிந்ததை குறிப்பு எழுதுதல். எடுத்துக் கூறுதல், விளக்குதல், சங்ககால, தற்கால இலக்கியப் பாடல்கள் அறிமுகம். பாடல்கள் பாடுதல், உணர்தல், விளக்குதல்
|
எளிய ஆங்கிலப் பாடல்களை அபிநயத்துடன் பாடுதல், ஆங்கிலத்தில் உரையாடுதல், சிறுவர் கதை படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சூழலைக் காட்டி, சூழலிலுள்ள சொற்களைக் கற்பித்தல், சொற்களைத் திரட்டுதல், பதிவு செய்தல்
|
இல்லை
|
ஐந்தாம் நிலை
|
தற்கால இலக்கியப் பாடல்களைப் படித்தல், எளிய சங்ககால இலக்கியப் பாடல்களைப் படித்தல், சிறுவர் கதை உரைநடை படித்தல், படித்தவற்றைப் பேசுதல், எழுதுதல், நடித்துக் காட்டுதல்.
|
ஆங்கிலத்தில் உரையாடுதல், சூழலுக்கு ஏற்ப உரையாடுதல், சிறுவர் கதை படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்.
|
இல்லை
|
ஆறாம் நிலை
|
தற்கால, சங்ககால இலக்கியப் பாடல்களைப் படித்தல், தரமான சிறுகதைகள், கட்டுரைகள் படித்தல், படித்தவற்றைச் சொந்தமாக பேசுதல் எழுதுதல், நடித்தல், சொந்தமாகக் கதை, கவிதை எழுதுதல்
|
ஆங்கிலம் பேசுதல், உரையாடுதல், பயன்பாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு பேசவைத்தல், சிறுவர்கதைகள் படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்
|
சூழலிலுள்ள மொழியில் எளிய பாடல்கள் அறிமுகம், எழுத்துகள் அறிமுகம், செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை, இணைத்துப் படித்தல், சொற்கள் படித்தல், செய்தித்தாள் படித்தல்
|
ஏழாம் நிலை
|
தற்கால, சங்ககால இலக்கியப் பாடல்களைப் படித்தல், உள்வாங்குதல், தரமான சிறுகதைகள், கட்டுரைகள், படித்தல் படித்தவற்றை உணர்ந்து பேசுதல், நடித்தல், சொந்தமாகப் படைப்புகள் ஆக்குதல்.
|
ஆங்கில இலக்கியப் படைப்புகள் அறிமுகம், கவிதை, சிறுகதை, கட்டுரை படித்தல் உணர்தல், கலந்துரையாடுதல், சொற்களைத் தொகுத்தல், சிறு சிறு தொடர்களை சொந்தமாக எழுதுதல்
|
எளிமையான பாடல்களை அபிநயத்துடன் பாடுதல், எளிய உரையாடல், சிறுவர்கதை படித்தல், நாடகம் நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்
|
எட்டாம் நிலை
|
தற்கால சங்ககால இலக்கியப் படைப்புகளைப் படித்தல், உள்வாங்குதல், படித்தவற்றை உணர்ந்து மேடையில் பேசுதல், நடித்தல், சொந்தமாகக் கதை, கவிதை, கட்டுரைகள் உருவாக்குதல்
|
ஆங்கிலக் கவிதை, சிறுகதை, கட்டுரை படித்தல், உணர்தல், கலந்துரையாடுதல், சொற்களைத் தொகுத்தல், பயன்பாட்டிலுள்ள சிறு சிறு பத்திகளைச் சொந்தமாக எழுதுதல், சூழலுக்கு ஏற்ப பேசவைத்தல்
|
பாடல்கள் பாடுதல், பயன்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப பேசவைத்தல், சிறுவர்கதைகள் படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்,
|
ஒன்பதாம் நிலை
|
மேற்கூறியவாறே வடிவமைக்கவும்
|
ஆங்கிலச் செய்தித்தாள் படித்து படித்தவற்றை தொகுத்துரைத்தல் - படித்ததை எளிய நடையில் எழுதுதல் - ஆங்கிலப் படைப்பாக்கங்கள் படித்தல், அது போல எழுதப் பயிற்றுவித்தல், தான் விரும்புவதைச் சொந்தமாக எழுதுதல்,
|
சூழலிலுள்ள மொழியின் இலக்கியப் படைப்புகள் அறிமுகம், படித்தல், உணர்தல், கலந்துரையாடுதல், சொற்களைத் தொகுத்தல், சிறு சிறு தொடர்களை சூழலிலுள்ள மொழியில் சொந்தமாக எழுதுதல்.
|
பத்தாம் நிலை
|
மேற்கூறியவாறே வடிவமைக்கவும்
|
மேற்கூறியவாறே வடிவமைக்கவும்
|
சூழலிலுள்ள மொழியில் படித்த கவிதை, கதை, கட்டுரை ஆகியவற்றைத் தொகுத்துரைத்தல், எழுதுதல், சொந்தமாக எழுதுதல், சூழலில் உள்ளவற்றை சொந்தமாக எழுதுதல்
|
சிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள தொடர்கள் அந்த அந்த நிலைக்குரிய / பாடத்திற்குரிய அளவுகோல்களாகும். இந்த அளவுகோலை மாணவர்கள் அடைவதற்கு, ஆசிரியர்கள் செயற்படவேண்டும். தேர்வுமுறையை விட மாணவர்களது கற்றல் வெளிப்பாட்டுப் பதிவுகளே அளவுகோலை அடைந்ததற்கான சான்றுகளாகக் கருதப்படும்..
|
தமிழ்க்கனல் - தமிழம் வலை
pollachinasan@gmail.com - mobile: 890 300 2071
|