முனைவன். 1981 களில் வெ.மு.பொதிய வெற்பன் அவர்களால் கும்பகோணத்திலிருந்து வெளியிடப்பட்ட இலக்கிய விமர்சன இதழ். காலாண்டிதழாக வெளிவந்துள்ளது. இந்த இதழ் 5-6 இதழாக மலர்ந்துள்ளது. தனிச்சுற்றுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு வெளிவந்துள்ளது. இதழின் விமர்சனக் கட்டுரைகள் நுட்பமாக மார்க்சியச் சிந்தனைகளின் உரசல்களாக, செறிவாக படைக்கப்பட்டுள்ளது. நினைவாஞ்சலி என்ற கட்டுரையின் தலைப்புக் கவிதையாக புதுமைப்பித்தனின் முத்தான கவிதையை வெளியிட்டுள்ளது. வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்ற புனைபெயரில் அவர் எழுதியது).....இத்தனைக்கும் மேலே - இனி ஒன்று - ஐயா நான் - செத்ததற்கும் பின்னால் - நிதிகள் திரட்டாதீர் - நினைவை விளிம்புகட்டி - கல்லில் வடித்து - வையாதீர் - வானத்து அமரன் - வந்தான் காண் - வந்தது போல் - போனான் காண் என்று - புலம்பாதீர் - அத்தனையும் வேண்டாம் - அடியேனை விட்டு விடும்.... என்று அவர் எழுதியுள்ளது இன்றைய சூழலில் படித்துக் கருத்துணர வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. தீக்கதிர், தாமரை, வானம்பாடி, தமிழ் மலர்ச்சி, கார்க்கி, புதிய நம்பிக்கை, சுட்டி, படிகள் போன்ற நட்பு இதழ்கள் பற்றிய குறிப்பையும் வெளியிட்டுள்ளது. புதிய வரவு என நூல்கள் விமர்சனமும் செய்துள்ளது. பார்வைகள் என முனைவன் இதழ் பற்றிய பிறரது கருத்துகளையும், பிற இதழ்களிலிருந்தும் நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்ட கருத்துச் செறிவேற்றுகின்ற குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,