அமிர்தவசனி. 1962 இல் வெளிவந்த இருமாத இதழ் இது. இந்த இதழ் 13 ஆண்டின் 10 ஆவது இதழ். ஆசிரியர் முத்துசுவாமி. சென்னையிலிருந்து வெளிவந்த இந்த இதழ் ஆன்மிகச் செய்திகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. திருப்புகழ், மகாபாரதம் போன்ற ஆன்மிக படைப்பாக்கங்களிலிருந்து செய்திகளைத் திரட்டி வெளியிட்டுள்ளது. திருப்புகழ்மணி, கி.வா.ஜ., குகஸ்ரீ, அ.கி.ரங்கராஜன், பரமானந்தம் என படைப்பாளிகளின் ஆன்மிகக் கட்டுரைகள் இந்த இதழில் காணப்படுகிறது. எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே - என்கிற கருத்தினைத் தலைப்பிலிட்டுத் தொடர்ந்துள்ளது, ஒவ்வொரு பக்கத்திலும் தொடர் எண் காணப்படுகிறது. மேலும் மரபுப்பாவிலமைந்த கருத்துச் சிதறல்கள் ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படுகிறது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |